கொரோனா அச்சத்தால் கஞ்சாவை வாங்கி குவிக்கும் கனேடிய நகர மக்கள்!

Report Print Balamanuvelan in கனடா

கொரோனா அச்சத்தால் மக்கள், உணவுப்பொருட்களையும் டாய்லெட் பேப்பர்களையும் வாங்கிக் குவித்தாயிற்று... அடுத்து அவர்கள் குறிவைத்துள்ள விடயம் கஞ்சா!

கனடா நகரமான கால்கரியைச் சேர்ந்த மக்கள் கஞ்சாவை வாங்கி சேமிக்கிறார்களாம்.

டாய்லெட் பேப்பர் அளவுக்கு அடிதடியில் இறங்கவில்லை என்பது உண்மைதான் என்றாலும், கஞ்சா விற்பனை சூடு பிடித்துள்ளதாக தெரிவிக்கிறார்கள் வியாபாரிகள்.

கஞ்சா வியாபாரம் செய்யும் Pinette என்பவர், தங்கள் கடைகளுக்கு அதிக அளவில் மக்கள் வருவதையடுத்து, கடையின் சில பாகங்களை தொடர்ந்து கிருமி நீக்கம் செய்துவருவதாக தெரிவிக்கிறார்.

அரை மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமி நாசினியால் சுத்தம் செய்கிறோம் என்கிறார் அவர்.

சில வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வாங்கும் அதே நேரத்தில், சிலர் கொரோனாவுக்கு அஞ்சி கடைக்கு வருவதில்லை என்கிறார் Bali என்னும் வியாபாரி.

உணவுப்பொருட்கள் அளவுக்கு வாங்கிக் குவிக்கவில்லை என்றாலும், நிச்சயம் சில வாடிக்கையாளர்கள் கஞ்சாவை வாங்கி சேமிக்கிறார்கள் என்கிறார் Mylann Doell.

ஒருவேளை, அது அவர்களது மன அழுத்தத்தை குறைக்குமாக இருக்கலாம் என்கிறார் அவர்.

மேலதிக தகவல்களுக்கு

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்