கனேடிய மருத்துவமனையில் சந்தேகத்துக்குரிய வகையில் பலர் உயிரிழப்பு: மருத்துவர் கைது செய்யப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி

Report Print Balamanuvelan in கனடா
0Shares

கனேடிய நகரம் ஒன்றில் மருத்துவர் ஒருவர் மீது முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதால், அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

கனடாவின் கியூபெக்கைச் சேர்ந்த Dr. Brian Nadler (35) என்பவர், ஒன்ராறியோவிலுள்ள Hawkesbury என்ற நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

கடந்த வியாழக்கிழமை மாலை, அவருடைய நோயாளி ஒருவரைக் கொலை செய்ததாக Dr. Brian கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்குற்றம் சாட்டப்பட்டு Dr. Brian கைது செய்யப்பட்டுள்ளதால், அவரிடம் நோயாளிகளாக சிகிச்சை பெற்றவர்களும், இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

இதற்கிடையில், Dr. Brian கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே மருத்துவமனையில் சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தவர்களின் வழக்குகள் தூசு தட்டப்பட்டு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், அந்த மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் கொலைக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்டாலும், அந்த மருத்துவமனை மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறும் Hawkesbury நகர மக்கள், தொடர்ந்து தாங்கள் அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்வோம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்