ஐபிஎல் ஆட்டம்: ஓராண்டு தடைக்கு பின்னர் களமிறங்குகிறார் ஸ்டீவன் சுமித்

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

12-வது ஐ.பி.எல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரகானே டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்கிறது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு தடைக்கு பிறகு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் விளையாடுகிறார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தால் ராஜஸ்தானை முன்னேற்றம் அடைய செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இரு அணிகளும் 17 முறை மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் 10 ஆட்டத்திலும், பஞ்சாப் 7 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்