வயசானாலும் சிங்கம் சிங்கம்தான்.. ஒவ்வொரு போட்டியும் நாங்களா செதுக்கினது! சென்னை வீரர்களின் தெறிக்கும் ட்வீட்

Report Print Kabilan in கிரிக்கெட்

ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்கு சென்னை அணி தகுதி பெற்றதைத் தொடர்ந்து, அந்த அணி வீரர்களான ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் ஆகியோர் வெற்றி குறித்து ட்வீட் செய்துள்ளனர்.

12வது ஐ.பி.எல் போட்டி தொடரின் இறுதிப்போட்டி மே 12ஆம் திகதி நடக்க உள்ளது. நேற்றைய போட்டியில் டெல்லியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த வெற்றியை சென்னை அணி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், சென்னை அணி வீரர்களான ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெற்றி குறித்து ட்வீட் செய்துள்ளனர்.

ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண Win-நயம் செய்துவிடல்! சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்.

மொத்தத்துல நாங்க நாங்கதான்! எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும். மீண்டும் ஒரு ஐ.பி.எல் சரித்திர பயணத்தை நோக்கி போடு நடை’ என தெரிவித்துள்ளார்.

இதேபோல் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் கூறுகையில், ‘எங்களோட சென்னை அணியின் ஒவ்வொரு ஐ.பி.எல்-யும், ஒவ்வொரு போட்டியும், ஒவ்வொரு ஓவரும் ஏன் ஒவ்வொரு பந்துமே நாங்களா செதுக்கினதுடா.. எடுடா வண்டிய போடுடா விசில்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்