இங்கிலாந்து அணித்தலைவர் இடைநீக்கம்..அணி வீரர்களுக்கு அபராதம்: எதற்காக தெரியுமா

Report Print Basu in கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியிலிருந்த இங்கிலாந்து அணித்தலைவர் இயான் மோர்கனை இடைநீக்கம் செய்யப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

மே14ம் திகதி பிரிஸ்டல் மைதானத்தில் இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதிய 3வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று. மழை காரணமாக முதல் போட்டி கைவிடப்பட்ட நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-0 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், 3வது ஒரு நாள் போட்டியில் மெதுவாக பந்து வீசிய குற்றத்திற்காக இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கன், 4வது ஒரு நாள் போட்டியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாகவும், அவரது போட்டி சம்பளத்திலிருந்து 40 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

மேலும்,இங்கிலாந்து அணி வீரர்களின் போட்டி சம்பளத்திலிருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் 50 ஓவர் வீச இங்கிலாந்து அணி நான்கு மணி நேரம் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியின் போதும் மோர்கன் இதே குற்றத்தில் சிக்கினார் என்பது நினைவுக்கூரதக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்