சச்சின், சங்ககாரா சாதனைகள் சமன்... ஒரே போட்டியில் பட்டையை கிளப்பிய ஷாகிப்

Report Print Basu in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில், வங்கதேச ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹாசன் பல சாதனைகளை சமன் செய்தும், புதிய சாதனை படைத்தும் அசத்தியுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 43வது லீக் போட்டியில், வங்கதேச அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். ஆனாலும், ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு நியூசிலாந்து அணியே தகுதி பெற்றது.

இப்போட்டியில் 64 ஓட்டங்கள் விளாசிய வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹாசன், இந்த உலகக்கோப்பை தொடரில் 7வது முறையாக அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக அரைசதாம் விளாசிய ஜாம்பவான் சச்சின் (7 அரைசதம், 2003) சாதனையை சமன் செய்தார்.

ஒட்டு மொத்தமாக உலகக்கோப்பை அரங்கில் ஷாகிப் அடித்த 12வது அரைசதம் இதுவாகும். இதன் மூலம் முன்னாள் இலங்கை வீரர் சங்ககாரா அடித்த 12 அரைசதம் சாதனையை சமன் செய்தார் ஷாகிப். இப்பட்டியலில் ஜாம்பவான் சச்சின் 21 அரைசதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

ஷாகிப் அல் ஹாசன் இந்தாண்டு உலகக்கோப்பை தொடரில் 606 ஓட்டங்களை கடந்தார். இதன் மூலம் ஜாம்பவான் சச்சின் (673 ஓட்டங்கள், 2003), அவுஸ்திரேலியாவின் மாத்யூ ஹேடன் (659 ஓட்டங்கள், 2007) ஆகியோருக்கு பின் இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது வீரரானார் ஷாகிப். தவிர, உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக 8 போட்டிகளில் 40 ஓட்டங்களுக்கு மேல் கடந்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் ஷாகிப்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers