20 ஆண்டுகால கிரிக்கெட்.. உருக்கத்துடன் ஓய்வு பெற்ற பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான சோயிப் மாலிக் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி, ஆறுதல் வெற்றியுடன் பாகிஸ்தான் அணி வெளியேறியது.

பாகிஸ்தான் அணியின் அனுபவ வீரர் சோயிப் மாலிக்கிற்கு இந்தப் போட்டி கடைசி ஒருநாள் போட்டியாக அமைந்தது. முன்னர் அறிவித்தது போலவே அவர் விடைபெற்றார். அதன் பின்னர், ஓய்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில்,

‘இன்று நான் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன். என்னுடன் விளையாடிய வீரர்கள், பணியாற்றிய பயிற்சியாளர்கள் குடும்பம், நண்பர்கள், ஊடகங்கள், ஸ்பான்சர்கள் என அனைவருக்கும் மிகப் பெரிய நன்றி. மிக முக்கியமாக எனது ரசிகர்கள். I Love You All...' என தெரிவித்துள்ளார்.

அத்துடன் செய்தியாளர்களை சந்தித்த மாலிக் கூறுகையில், ‘இதற்கு முந்தைய பேட்டிகளின் போது நான் கூறியதை போன்று, உலகக் கோப்பையுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். பாகிஸ்தான் அணியின் கடைசி உலகக் கோப்பை போட்டியுடன் விடை பெற வேண்டும் என முடிவெடுத்திருக்கிறேன்.

நான் அதிகம் நேசிக்கும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது என்பது எனக்கு வருத்தமான முடிவு தான். ஆனால், இதன்மூலம் என்னால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும். மேலும் டி20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்த முடியும்’ என தெரிவித்துள்ளார்.

1999ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான சோயிப் மாலிக், கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளார். அவர் 287 ஒருநாள் போட்டிகளில் 7,534 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 9 சதங்கள், 44 அரை சதங்கள் அடங்கும். மேலும் ஆல்-ரவுண்டரான மாலிக் 158 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers