முதல் போட்டியே இந்த அணிக்கு எதிராகவா..! பதறும் தென் ஆப்பிரிக்க கேப்டன்

Report Print Kabilan in கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் அணியாக இந்தியாவை எதிர்கொள்வது கடினமானது என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் பாப் டூ பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பூர்வ உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முறையை ஐசிசி நேற்று அறிமுகப்படுத்தியது. இதன் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் ஆகஸ்ட் 1ஆம் திகதி மோதுகின்றன. இது ஆஷஸ் தொடரின் முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்க அணி அக்டோபர் மாதம் 2ஆம் திகதியில் இருந்து, இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக சாம்பியன்ஷிப் முறையின் கீழ் வருகிறது.

இந்நிலையில், இந்திய அணியுடன் விளையாடுவது குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பாப் டூ பிளிசிஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

‘டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏதாவது வித்தியாசமானதை வெளிப்படுத்த விரும்பினால், அதில் தென் ஆப்பிரிக்காவின் ஈடுபாடு குறிப்பிட தகுந்த வகையில் இருக்கும். டெஸ்ட் போட்டிக்கான புத்துணர்ச்சி தான் சாம்பியன்ஷிப்.

தென் ஆப்பிரிக்கா வீரர்கள் இதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். எந்தவொரு அணியும் இந்தியா சென்று விளையாடுவது கடினம் என்று கூறும். அந்த வகையில் எங்களுக்கு சாம்பியன்ஷிப் தொடர் கடினமாக தொடங்கப் போகிறது.

இறுதியாக ஒவ்வொரு அணிகளும் இந்தியா சென்று விளையாட வேண்டும். நாங்கள் சிறப்பாக தொடங்குவோம் என்று நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி மோசமாக விளையாடி முதல் சுற்றுடனே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers