இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்.. துடுப்பாட்டத்தை தெரிவு செய்த நியூசிலாந்து!

Report Print Kabilan in கிரிக்கெட்

காலே இன்று தொடங்கிய இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் இன்று தொடங்கியுள்ளது. திமுத் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ், டிக்வெல்லா, சுரங்கா லக்மல், குசால் மெண்டிஸ் ஆகிய முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் ராஸ் டெய்லர், டிம் சௌதி, ட்ரெண்ட் போல்ட், டாம் லாதம் ஆகிய முக்கிய வீரர்கள் இலங்கை அணி சவாலாக இருப்பார்கள்.

ஜீத் ராவல் மற்றும் டாம் லாதம் இருவரும் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.

இந்த மைதானத்தில் முதல் இன்னிங்சில் ஆடும் அணியின் சராசரி score 379, இரண்டாவது இன்னிங்சில் ஆடும் அணியின் சராசரி score 302 என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்