டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இது நடக்கும்: தினேஷ் கார்த்திக் நம்பிக்கை.. கவலையில் பந்த்

Report Print Basu in கிரிக்கெட்
255Shares

2020 ஐசிசி டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என இந்திய விக்கெட் கீப்பரும் துடுப்பாட்டகாரருமான தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இன்னும் நடு வரிசை இடத்தை பிடிக்க வீரர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது, எதிர்வரவிருக்கும் டி-20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் பினிஷராக பங்களிப்பதில் நான் ஆர்வமாக உள்ளேன்.

அணிக்கு சிறந்த இலக்கை நிர்ணயிக்கும் நடு வரிசையில் விளையாடும் போது நம்பிக்கையாக உணர்கிறேன் என கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த முடிந்த விஜய் ஹசாரே கோப்பையில் கார்த்தி 418 ஓட்டங்களை குவித்தார். மேலும், நாளை தொடங்கவுள்ள 2019-20 சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணியை தலைவராக வழிநடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விக்கெட் கீப்பராக இருக்கும் ரிஷப் பந்த் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில் தற்போது சஞ்சு சாம்சன் அணியில் இடம்பிடித்துள்ளார். இதனால், பந்த்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பந்த் தொடர்ந்து சொதப்பினால் அனுபவமிக்க தினேஷ் கார்த்திக்கு அணியில் இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்