இலங்கை வீரர் மலிங்காவையே பிரமிக்க வைத்த பந்து வீச்சாளர்: யார் அவர் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, இந்தியா பந்து வீச்சாளர் பும்ராவின் பந்து வீச்சை பார்த்து மிரண்டு போயுள்ளதாக கூறியுள்ளார்.

உலககிரிக்கெட் போட்டியில் தன்னுடைய யார்க்கர் மூலம் பேட்ஸ்மேன்களை மிரட்டி வருபவர் இலங்கை வீரர் மலிங்கா, டி20 போட்டிகளில் குறிப்பாக கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பான பந்து வீச்சாளர் என்ற பெயர் பெற்றவர்.

இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் நானே இந்திய பந்து வீச்சாளர் பும்ராவின் திறமையை கண்டு பிரம்மிப்பதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மும்பை அணியின் பும்ரா இடம் பெற்றார். நானும் மும்பை அணிக்காக ஆடி வருகிறேன்.

அப்போதிலிருந்து அவரது தனித்துவமான பந்து வீச்சை பார்த்த நான் அவருக்கு எனது ஆலோசனைகளை வழங்கினேன்.

தற்போது உலகின் நம்பர்-1 ஆக வளர்ந்து நிற்கும் பும்ராவையும் அவரது இந்த வளர்ச்சியை பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. அதே போன்று அவரது கிரிக்கெட் வாழ்வில் நான் ஆலோசனை வழங்கியுள்ளது மிக மகிழ்ச்சியான விடயம் ஒரு இளம் வீரருக்கு என்னால் முடிந்தவற்றை நான் பகிர்ந்துள்ளேன்.

என்னைக் காட்டிலும் அவர் பந்து வீச்சில் அதிக திறன்களை வைத்துள்ளார். அனைத்தையும் கற்று கொள்ளும் ஆர்வத்தில் இருக்கிறார். அற்புதமாக யார்க்கர் வீசுகிறார்.

அதிலும் குறிப்பாக மெதுவாக யார்க்கர் பந்துகளை வீசுகிறார். அது எப்படி முடிகிறது? என்று என்னால் தெரியவில்லை. அந்த அளவுக்கு அவர் விக்கெட் வீழ்த்தும் வேட்கையில் இருக்கிறார் என்று கூறி முடித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்