சிஎஸ்கே அணிக்கு மீண்டும் பெரிய அடி! இளம் வீரருக்கு மறுபடியும் கொரோனா

Report Print Basu in கிரிக்கெட்
228Shares

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரரான ரித்துராஜ் கெய்க்வாட்டுக்கு மீண்டும் கொரோனா உறுதியானது.

துபாய் சென்றடைந்த பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் சி.எஸ்.கே அணியை சேர்ந்த தீபக் சஹர் மற்றும் ரித்துராஜ் ஆகிய இரண்டு வீரர்கள் மற்றும் 12 நிர்வாகிகளுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது.

தீபக் சஹருக்கு மேலும் இரண்டு முறை நடத்தப்பட்ட சோதயைில் கொரோனா இல்லை என உறுதியானதையடுத்த அவர் அணியுடன் பயிற்சியை தொடங்கினார்.

ரித்துராஜ் கெய்க்வாட்டுக்கு நடத்தப்பட்ட சோதனையில் மீண்டும் கொரோனா உறுதியானதால் அவர் தொடர்ந்து தனிமைப்படுத்தலில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே பணியாளர்கள் மற்றும் மீதமுள்ள வீரர்களுடன் தொடர்பு கொள்ள அவர் அனுமதிக்கப்படமாட்டார், மேலும் தொடர்ந்து தனிமைப்படுத்தலில் இருப்பார்.

செப்டம்பர் 19ம் தொடங்கும் 2020 ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதவுள்ளன.

ஏற்கனவே சிஎஸ்கே வீரர்களான ரெய்னா மற்றும் ஹர்பஜான் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நிலையில் தற்போது ரித்துராஜ் கெய்க்வாட்டுக்கு மீண்டும் கொரோனா உறுதியாகியுள்ளது சென்னை அணிக்கு மிகப்பெரிய அடியாக அமைந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்