வரலாற்று சாதனை படைத்த வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை

Report Print Kumar in கல்வி

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை வரலாற்று சாதனை படைத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்றில் முதன்முறையாக க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் 42 மாணவிகள் 09 ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நேற்று வெளியாகியுள்ள பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 21 மாணவிகள் எட்டு ஏ சித்திகளையும் ஐந்து மாணவிகள் ஏழு ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர்.

வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் இதுவரையில் 99.3 வீதமான மாணவிகள் சித்தியடைந்து உயர்தரம் கற்பதற்கான வாய்ப்பினைப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் அதிபர் திருமதி சரணியா சுபாகரன் தெரிவித்தார்.


மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்