தயவு செய்து இது மட்டும் வேண்டாம்: கண்ணீருடன் பிக்பாசிற்கு வேண்டுகோள் வைத்த ஓவியா

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருந்த நடிகை ஓவியா அழுவதைப் போன்று புரோமோ காட்டப்பட்டிருந்தது.

இதனால் ஓவியா ஏன் அழுதார், யாரும் அவரை அழவைத்தார்களா? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தது. இதன் காரணமாக இன்றைய எபிஷோடை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

அதன் படி இன்றைய எபிஷோடின் போது, பிக்பாஸ் நடிகை ஓவியாவிடம் உங்களை அதிகம் பாதித்தது எது என்று கேட்டார்.

அதற்கு ஓவியா ஜூலி சொன்ன பொய் தான் தன்னை அதிகம் பாதித்ததாகவும், ஒருமுறை பொய் சொன்னால் ஓகே, ஆனால் தொடர்ந்து பொய் சொல்லிக்கொண்டிருப்பது சரியில்லை என்று கூறினார்

அதன் பின் உணர்ச்சியை அடக்க முடியாமல் ஏதோ கூற வந்து கூற முடியாமல் கண்கலங்கினார். அப்போது பிக்பாஸ் ஏன் முதல் முறையாக கண்கலங்குகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு ஓவியா சும்மா சொல்லாதீங்கா நான் இதற்கு முன் ஒரு முறை கண்கலங்கினேன்.

எப்போதும் பிக்பாஸ் வீட்டில் காலையில் எழும் போது பாடல் ஒன்று ஒலிக்கப்படும். அதே போன்று தான் ஒரு நாள் காலை எல்லோரும் எழும் போது பிக் பாஸ் வீட்டில் ஒலித்த ஒரு பாட்டை கேட்டு கண்கலங்கியதாக கூறினார்.

மேலும் அந்த பாட்டை கேட்டதும் பெரிதும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன், தயவுசெய்து அந்த மாதிரி சோகமான பாடலை இனி போடாதீர்கள், நான் அந்த அளவிற்கு ஸ்ட்ராங்கான பொண்ணு இல்லை.

நான் அழுவதை மற்றவர்கள் பார்க்க விரும்பவில்லை என கூறினார். ஓவியா கண்கலங்கிய போது தனது கண்களில் வந்த கண்ணீரை காமெராவுக்கு காட்டாமல் திரும்பிக்கொண்டார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers