மகனாக நடித்த சிறுவனுடன் உறவு கொண்ட பிரபல நடிகை: பணத்தால் மூடி மறைத்தது அம்பலம்

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

படத்தில் தனக்கு மகனாக நடித்த நடிகரின் மனதை மாற்றி உறவு கொண்ட ஹாலிவுட் நடிகை அவருக்கு பணம் கொடுத்து பிரச்சனையை தீர்த்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

The Heart is Deceitful Above All Things ஹாலிவுட் படத்தில் தாயும், மகனாகவும் நடித்தவர்கள் ஆசியா அர்ஜென்டோ, ஜிம்மி பென்னட்.

ஜிம்மிக்கு 17 வயது ஆன போது ஆசியா அவருடன் உறவு கொள்ள விரும்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கலிபோர்னியாவில் உள்ள ஹொட்டல் ஒன்றுக்கு ஜிம்மியை அழைத்துச் சென்றுள்ளார்.

ஹொட்டல் அறையில் வைத்து ஜிம்மிக்கு தாம் எழுதிய கடிதங்களை எல்லாம் காட்டி, அவருடன் உறவு கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நடந்தபோது ஜிம்மிக்கு வயது 17, ஆசியாவுக்கு 37 வயது. இந்த சம்பவத்தை அடுத்து ஜிம்மி மனதளவில் பாதிக்கப்பட்டார்.

மட்டுமின்றி சினிமாவில் அவரால் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் தவித்தார். இதனால் அவரின் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

ஜிம்மிக்கு தற்போது 22 வயதாகிறது, ஆசியாவுக்கு 42 வயது. மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள ஜிம்மி தனக்கு 3.5 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

3.5 மில்லியன் முடியாது என்று கூறி 380,000 டொலர்கள் அளித்து பிரச்சனை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துவிட்டார் ஆசியா.

பிரச்சனையை தீர்க்க ஆசியா முன் வந்ததையடுத்து ஜிம்மி தான் வைத்திருந்த புகைப்படத்தை அவரிடம் ஒப்படைத்துள்ளார்.

2013ம் ஆண்டு ஹொட்டல் அறையில் இருவரும் படுக்கையில் எடுத்த செல்ஃபி தான் அது. ஆசியாவா இப்படி நடந்துகொண்டது என்று ஹாலிவுட்காரர்கள் வியக்கிறார்கள். அவர்களின் வியப்பிற்கு காரணம் உண்டு.

இத்தாலியை சேர்ந்த ஆசியா அர்ஜென்டோ பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் வெயின்ஸ்டீன் மீது பாலியல் புகார் தெரிவித்தார்.

ஹொட்டல் அறையில் வைத்து வெயின்ஸ்டீன் தன்னை கட்டாயப்படுத்தி வாய் வழி புணர்வு வைத்துக் கொண்டதாக கூறினார்.

வெயின்ஸ்டீனுக்கு எதிராக தைரியமாக பாலியல் புகார் தெரிவித்த ஆசியா ஒரு சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளது தான் பலரையும் வியக்க வைத்துள்ளது.

நான் ஜிம்மியுடன் உறவு கொள்ளவில்லை. நான் ஜிம்மியுடன் படுக்கைக்கு சென்றதாக வெளியான செய்திகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

ஜிம்மி பணம் இல்லாமல் கஷ்டப்படுவதால் அவருக்கு பணம் கொடுத்து உதவியுள்ளதாக ஆசியா அர்ஜென்டோ தற்போது தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்