குழந்தை பெற்றெடுத்த சில மணி நேரத்தில் உயிரிழந்த பிரபல இளம் நடிகை.. குடும்பத்தார் பரபரப்பு குற்றச்சாட்டு

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

குழந்தை பெற்றெடுத்த சில மணி நேரத்தில் பிரபல நடிகையும் அவர் குழந்தையும் உயிரிழந்த நிலையில் சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததே இதற்கு காரணம் என அவர் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மராத்தி திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை பூஜா ஜுன்சர் (25) கர்ப்பமான நிலையில் நடிப்புக்கு தற்காலிகமாக முழுக்கு போட்டிருந்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் தங்கியிருந்த பூஜாவுக்கு ஞாயிறு நள்ளிரவு 2 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அருகில் இருந்த ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு பூஜாவுக்கு குழந்தை பிறந்த நிலையில் பிறந்த சில நிமிடங்களில் அது உயிரிழந்தது.

இதையடுத்து அங்கிருந்த மருத்துவர்கள் பூஜாவை உடனடியாக ஹிங்கோலி சிவில் மருத்துவமனைக்கு கொண்டு போக உறவினர்களிடம் சொன்னார்கள்.

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் பூஜா அந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் மிகவும் தாமதமாக வந்ததால் தான் பூஜா உயிரிழந்தார் என அவர் உறவினர்கள் குற்றஞ்சாட்டியதோடு பொலிசில் புகாரும் அளித்துள்ளனர்.

இதையடுத்து பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் பூஜாவின் மரணத்துக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்