கொரோனாவில் இருந்த மீண்டுவிட்டார் S.P.B! நுரையீரல் தொற்று குணமடைய? மகன் சரண் சற்று முன் வெளியிட்ட வீடியோ

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா காரணமாக கவலைக்கிடமாக இருந்த நிலையில், தற்போது அவர் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டதாக, அவரது மகன் சரண் சற்று முன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல திரைப்பட பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால், அவரின் உடல்நிலை சில தினங்களுக்கு முன்பு கவலைக்கிடமானது.

இதனால் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவர் விரைவில் இந்த நோயில் இருந்து குணமடைந்து வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அதன் படியே நாட்கள் செல்ல, செல்ல எஸ்.பி.பியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம், அவரது மகன் சரண் ஆகியோர் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், சரண் சற்று முன் வெளியிட்டுள்ள வீடியோவில், தந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என உறுதியாகி உள்ளது. நுரையீரல் தொற்று குணமடைய சிறிது காலம் தேவைப்படுவதால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை தொடர்கிறது

ஐபேடில், கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை பார்த்து வருகிறார் எனவும் பேச நினைப்பதை எழுதி காண்பிக்கிறார் எனவும் எஸ்.பி.சரண் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்