கொரோனா அச்சுறுத்தல்... குடியிருப்புக்குள் முடங்கியதால் உயிர் தப்பிய மக்களின் எண்ணிக்கை வெளியானது

Report Print Arbin Arbin in ஐரோப்பா

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து பல்வேறு நாடுகளின் அரசுகள் பொதுமக்கள் நலன் கருதி மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளால் இதுவரை காப்பாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியாகி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 11 ஐரோப்பிய நாடுகளில் ஒட்டுமொத்தமாக 59,000 மக்களின் உயிர்கள், இதுவரை காப்பாற்றப்பட்டுள்ளது.

இது, அரசின் நடவடிக்கைகளை தங்களின் பாதுகாப்புக்கென கருதி, குடியிருப்புக்குள் முடங்கிய மக்களின் பட்டியல் என்றே கூறப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட 11 ஐரோப்பிய நாடுகளிலும், பொதுமக்கள் நலன் கருதி அந்தந்த அரசாங்கங்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் பலனே இந்த 59 ஆயிரம் மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட காரணம் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதில், கொரோனா பாதிப்புக்கு இலக்காகி சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளான மக்கள், உரிய காலத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டதால் கிடைத்த பலன், சமூக விலகல் மற்றும் ஊரடங்கு உத்தரவுகள் என பல காரணிகள் கூறப்படுகிறது.

கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியில், அந்த அரசாங்கம் முன்னெடுத்த கடும் நடவடிக்கைகளின் பலனாக, இதுவரை 38,000 மக்கள் மரணத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.

ஸ்பெயின் நாட்டில் இந்த எண்ணிக்கையானது 16,000 என தெரியவந்துள்ளது. பிரான்ஸ்(2,500), பெல்ஜியம்(560), ஜேர்மனி(550), பிரித்தானியா(370), சுவிட்சர்லாந்து(340), ஆஸ்திரியா(140), ஸ்வீடன்(820), டென்மார்க்(69), நோர்வே(10).

இந்த 11 நாடுகளில் மொத்தமாக 7 முதல் 43 மில்லியன் மக்கள் கொரோனாவுக்கு இலக்காகி இருக்கலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

ஆனால் ஒவ்வொரு நாடுகளும் உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டுள்ள கணக்குகள் மிக குறைவே என விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

பெரும்பாலான கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கானவர்களில் லேசான அறிகுறிகள் அல்லது அறிகுறியே இல்லாத நிலையே, உரிய கணக்குகள் வெளிவராததற்கு காரணமாக கூறப்படுகிறது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்