உலகக்கோப்பையை கையில் வைத்துக் கொண்டே இங்கிலாந்தை கிண்டல் செய்த பிரான்ஸ் வீரர்! வெளியான வீடியோ

Report Print Santhan in கால்பந்து

பிரான்ஸ் அணி வீரரான பால் போக்ஹா கையில் உலகக்கோப்பையை வைத்துக் கொண்டு இங்கிலாந்தை கிண்டல் செய்யும் விதமாக பாட்டுப் பாடி ஆட்டம் போட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் குரோசியாவை வீழ்த்திய பிரான்ஸ் அணி வீரர்கள், உலகக்கோப்பை தங்கள் கைக்கு வந்தவுடன் முத்தம் கொடுப்பது, கட்டியணைத்து பிடித்து கொள்வது, புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பது போன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

அந்த வகையில் பிரான்ஸ் அணி மிட்பில்டிரான Paul Pogba கையில் உலகக்கோப்பையை வைத்துக் கொண்டு, ‘It’s Coming Home என்ற பாடலை கிண்டல் செய்யும் விதமாக பாடினார்.

முதலில் பாடிய அவர் அதன் பின் இது ஒரு விளையாட்டிற்காக, மன்னிக்கவும் என்று கூறியுள்ளார்.

It’s Coming Home என்ற வார்த்தையை இங்கிலாந்து ரசிகர்களே அதிகம் பயன்படுத்துவர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ‘It’s Coming Home என்ற வார்த்தை கடந்த 1996-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த Euro ‘96’ என்ற தொடரில் தான் வந்ததாக கூறப்படுகிறது.

அந்த தொடரில் இங்கிலாந்து அணி அரையிறுதிப் போட்டி வரைக்கும் தகுதி பெற்றது. அப்போது இங்கிலாந்து ரசிகர்கள் It's Coming Home என்று கூறினர்.

இது அப்படியே மிகவும் பிரபலமானதால் 1998-ஆம் ஆண்டு பிரான்சில் நடந்த உலகக்கோப்பை போட்டியின் இந்த வார்த்தை அந்த தொடருக்கு ஏற்றபடி மறுபதிவு செய்து ஒரு பாடலாக வெளியிடப்பட்டது.

இங்கிலாந்து அணியின் கால்பந்தாட்ட வீரர்கள் எங்கு சென்று ஒரு பெரிய தொடரில் விளையாடினாலும், இங்கிலாந்து ரசிகர்கள் It's Coming Home என்ற வார்த்தையை பயன்படுத்துவர்.

இப்படி இங்கிலாந்திற்கே சொந்தமான வார்த்தையாக கருதப்படும் வார்த்தையை Paul Pogba அதை கிண்டல் செய்யும் விதமாக பாடியிருப்பது, வைரலாகி வருகிறது.

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து அணி, குரோசியாவுடன் மோதும் போது ரசிகர்கள் It's Coming Home என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers