ஈபிள் கோபுரம் மூடல்.. வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்ட ஊழியர்கள்! காரணம் என்ன?

Report Print Kabilan in பிரான்ஸ்
226Shares
226Shares
ibctamil.com

பிரான்ஸின் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தை பார்வையிடுவதற்காக கொண்டுவரப்பட்டுள்ள புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈபிள் கோபுர ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாரிஸ் நகரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தை பார்வையிட, ’பாரிஸ் நினைவுச்சின்னத்தின் புதிய பார்வையாளர் அணுகல் கொள்கை’ நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒரு மாதத்திற்கு முன்னதாகவே ஈபிள் கோபுரத்தை பார்வையிடுவதற்காக பாதியளவு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. இதனால், ஒரே சமயத்தில் ஏராளமான பார்வையாளர்கள் ஈபிள் கோபுரத்தின் முன்பு குவிந்தனர்.

மேலும், தங்களுக்கு என தனியாக Lift வசதி செய்து தருமாறும் கோரிக்கை விடுத்தனர். இதனால், ஈபிள் கோபுர ஊழியர்களுக்கு பார்வையாளர்களை கையாளுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஈபிள் கோபுர ஊழியர்கள் 300 பேர் புதிதாக கொண்டுவரப்பட்ட நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, ஈபிள் கொபுரம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த வேலைநிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று குறிப்பிடப்படவில்லை.

கடந்த ஆண்டு 6 மில்லியன் பார்வையாளர்கள் ஈபிள் கோபுரத்திற்கு வருகை புரிந்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே பலவித வேலைநிறுத்தங்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக, ஈபிள் கோபுரத்தை பார்வையிடுவதில் சிக்கல் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்