பிரான்சுக்கு போகிறீர்களா? வீடு வாங்காதீர்கள்!: ஒரு பயனுள்ள செய்தி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

நீங்கள் பிரான்சில் வசிக்கிறீர்களா அல்லது சில ஆண்டுகளுக்கு பிரான்சில் வாழ்வதற்கு சென்றீர்களா?என்னவானாலும் பிரான்சில் வீடு வாங்கும் திட்டம் இருந்தால் கொஞ்சம் யோசித்து முடிவெடுங்கள்.

ஏனென்றால் பிரான்சைப் பொருத்தவரையில் வீடு வாங்குவதைவிட வீடு வாடகைக்கு பார்ப்பது நல்லது, லாபகரமானது.

நீங்கள் எவ்வளவு காலம் பிரான்சில் வசிக்கப்போகிறீர்கள் என்பதைப் பொருத்து முடிவெடுப்பது நல்லது.

ஏனென்றால் பிரான்சில் வீடு வைத்திருப்பது என்பது அதிக செலவு பிடிக்கும் ஒரு விடயமாகும். முதலாவது சொந்த வீடு வைத்திருப்போர், வாடகை வீட்டில் குடியிருப்போரை விட அதிக வரி செலுத்த வேண்டும்.

பிரான்சில் சொத்து வைத்திருப்போருக்கு இரண்டு வகையான வரிகள் உள்ளன. ஒன்று, கவுன்சில் வரி (council tax) இன்னொன்று சொத்து வரி (property tax).

நீங்கள் வாடகைக்கு குடியிருந்தால் கவுன்சில் வரி மட்டும் கட்ட வேண்டும், இன்னொரு விடயம், இந்த வரியும் 2021க்கு பின் முற்றிலும் அகற்றப்பட உள்ளதால் அதன் பின்னர் அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதேயில்லை. ஆனால் ஒரு வீட்டு உரிமையாளராக நீங்கள் இரண்டு வரிகளையும் கட்ட வேண்டும், இவற்றில் சொத்து வரி மிக அதிகமாகும்.

இதுபோக வேறு சில கட்டணங்களும் உள்ளன. ஒரு அபார்ட்மெண்ட்டில் உங்களுக்கு வீடு இருந்தால், வெப்பமாக்குவதற்கான கட்டணம், சுத்தம் செய்வதற்கான கட்டணம் என பல கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.

இவை ஒரு சொத்து மேலாளரால் வசூலிக்கப்படும், அவருக்கும் நிர்வாக செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும்.

பிரான்சைப் பொருத்தவரையில் இந்த கட்டணங்கள் வீட்டு உரிமையாளருக்கு அதிகம். குடியிருப்போர் ஒரு சிறிய தொகையை செலுத்தினால் போதும், அதுவும் வாடகையிலேயே அடங்கிவிடும்.

அதனால் ஒரு வீடு வாங்குவதை விட வீடு வாடகைக்கு பிடிப்பது அதிக நிம்மதியைத் தரும் விடயமாகும்.

இன்னொரு முக்கிய விடயம், பிரான்சில் வீடு வாடகைக்கு குடியிருப்போருக்கு பாதுகாப்பு அதிகம், உங்களை உடனடியாக வீட்டை காலி செய்ய யாரும் வற்புறுத்த முடியாது, பல மாதங்களுக்குமுன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.

அக்டோபர் முதல் மார்ச் வரை வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்றால் கூட உங்களை யாரும் வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது. வீடில்லாமல் யாரும் குளிர் காலத்தில் தெருக்களில் அவதியுறக்கூடாது என்பதற்காக இந்த திட்டத்தை பல ஐரோப்பிய நாடுகள் பின்பற்றுகின்றன.

அதனால் பிரான்சுக்கு செல்லும் எண்ணம் இருந்தால் வீடு வாங்காதீர்கள், வீடு வாடகைக்கு பாருங்கள், உங்களுக்கு அது அதிக லாபகரமானதும் பாதுகாப்பானதுமாகும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers