பிரான்சின் உயரிய விருது பெற்றுள்ள இந்தியர்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சின் உயரிய விருதான செவாலியே விருது இந்தியர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரான்சின் அந்த உயரிய கௌரவத்தைப் பெறுபவர் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கிரண்குமார்.

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக 2015 முதல் 2018 வரை பணியாற்றியவர் கிரண்குமார்.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பிரான்ஸ் அரசு வழங்கும் உயரிய விருதான செவாலியே விருதினை கிரண்குமாருக்கு வழங்கி பிரான்ஸ் கௌரவித்துள்ளது.

இந்தியா பிரான்ஸ் இடையே விண்வெளி மேம்பாட்டிற்கு தனது சிறப்பான பங்களிப்பை ஆற்றியதற்காக இந்த விருதினை வழங்கி கவுரவித்துள்ளது பிரான்ஸ் அரசு.

பிரான்ஸ் ஜனாதிபதி சார்பில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் Alexandre Ziegler, பிரான்சின் இந்த உயரிய கவுரவத்தை கிரண்குமாருக்கு வழங்கியதாக அரசு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

அந்த விருது வழங்கும் விழாவில் பிரான்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராகிய Jean-Yves Le Gallம் கலந்து கொண்டார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்