பிரான்ஸில் திடீரென்று புதிய கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு: கடும் கோபத்தில் மக்கள்

Report Print Basu in பிரான்ஸ்

கொரோனா அதிகரித்து வருவதால் மார்சேய் மற்றும் பாரிஸ் நகரில் பிரான்ஸ் அரசாங்கம் திடீரென்று புதிய கட்டுப்பாடுகளை விதித்ததால் மக்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.

பாரிஸ் உட்பட நாட்டின் பல பகுதிகள் மேலும் கட்டுப்பாடுகள் இல்லாமல், வாரங்களுக்குள் சிக்கலான சூழ்நிலையை எட்டும் அபாயம் இருப்பதாக சுகாதார அமைச்சர் ஆலிவர் வரன் எச்சரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து, தெற்கு பிரான்சின் மார்சேயில் சனிக்கிழமை தொடங்கி இரண்டு வாரங்களுக்கு அனைத்து பார்கள் மற்றும் உணவகங்கள் மூட உத்தவிடப்பட்டுள்ளன.

பார்கள் மூடப்படுவது மட்டுமின்றி, கடுமையான நெறிமுறைகளைக் கொண்ட நிறுவனங்களை தவிர பொதுமக்கள் செல்லும் மற்ற அனைத்து நிறுவனங்களும் மூடப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அரசாங்கத்தின் திடீர் புதிய கட்டுப்பாடுகளால் நகர மக்கள் கடும் கோபமடைந்துள்ளனர், இரு நகரங்களிலும் உள்ள உள்ளூர் தலைவர்கள் புதிய நடவடிக்கை குறித்து தங்களிடம் அரசாங்கம் ஆலோசிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

பிரான்சில் தற்போது வரை 4,81,141 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்,31,459 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்