பிரான்சில் பூசணிக்காய் மற்றும் வெள்ளரிக்காய்களில் பரவும் ஒருவகை வைரஸ் கண்டுபிடிப்பு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
521Shares

தென் பிரான்சில் பூசணிக்காய் மற்றும் வெள்ளரிக்காய்களில் பரவும் ஒருவகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது.

தக்காளி இலைச்சுருட்டு புது டில்லி வைரஸ் என்று அழைக்கப்படும் அந்த வைரஸ், பிரான்சின் சில பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அந்த வைரஸால் மனிதர்களுக்கு எந்த அபாயமும் இல்லை என வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், ஏற்கனவே பாதிக்கப்பட்ட தாவரங்கள் அழிக்கப்பட இருக்கின்றன. எங்கிருந்து இந்த வைரஸ் பரவியது என்பதைக் கண்டுபிடிப்பதற்காக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுகல் மற்றும் கிரீஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் காணப்பட்டாலும், இதற்கு முன் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இந்த வைரஸ் தக்காளிச்செடிகளை தாக்குவதுண்டு.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்