பிரான்சில் இருந்து அனைத்து இஸ்லாமிய குழுக்களையும் விரட்டுங்கள்! இப்படி சொன்னது யார் தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸில் தேவாலயத்தில் தீவிரவாதிய நடத்திய தாக்குதல் அரசியல் தரப்பினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய முன்னணி கட்சியின் தலைவர் மரீன் லூ பென் இது குறித்து கூறுகையில், பிரான்சில் இருந்து அனைத்து இஸ்லாமிய குழுக்களையும் விரட்டவேண்டும்.

குறிப்பாக UOIF அமைப்பினை (பிரான்சில் இஸ்லாமிய சங்கம். - Union of Islamic Organizations of France) அடியோடு இல்லாத அளவிற்கு ஒழிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இஸ்லாமியர்களால் இயக்கப்படும் அனைத்து அமைப்புக்கள், அவர்களின் கலாச்சார நிகழ்வுகள், ஒன்றியங்கள், விளையாட்டு அமைப்புகள், நல்லின அமைப்புக்கள் என அனைத்தையும் பிரான்சில் இருந்து அடியோடு அழிக்க வேண்டும் என மரீன் லூ பென் கூறியுள்ளார்.

மேலு, இஸ்லாமிய அமைப்புகளிடம் உள்ள அனைத்து சொத்துக்கள், நிலங்களையும் கட்டாயமாக மீட்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்