குரங்கு என இனரீதியாக விமர்சனம்: நைஜீரிய வீரரின் வேதனை

Report Print Harishan in ஜேர்மனி

கால்பந்து போட்டியின் போது சிறுவர்கள் கூட தன்னை இனரீதியாக விமர்சனம் செய்வதாக நைஜீரியா வீரர் லியொன் பலொகன் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

ஜேர்மனியில் ஆண்களுக்கான பண்டஸ்லிகா(Bundesliga) கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டியில் மொத்தம் 18 அணிகள் பங்குபெற்று விளையாடி வரும் நிலையில் பிரபல நைஜீரிய தடுப்பாட்ட வீரர் லியோன் பலொகன் ஜேர்மனி ரசிகர்கள் மீது பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஜேர்மன் கால்பந்து வாரிய அதிகாரிகளிடம் லியோன் கூறுகையில், ஹனோவர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மைன்ஸ் அணிக்காக தான் விளையாடிய போது தன் மீது சிலர் இன ரீதியான விமர்சனங்களை வைத்தனர்.

குறிப்பாக விமர்சனம் செய்த ரசிகர்கள் குழுவில் இருந்த சிறுவர்கள் சிலர் தன்னை குரங்கு, மற்றும் நைஜீரிய பூர்வீக இனம் குறித்தும் இழிவாக பேசியது தமக்கு மிகுந்த மன உலைச்சலை தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் லியோன் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்