மேர்க்கலின் முடிவு நெருங்கிவிட்டது: பகிரங்கமாக எச்சரிக்கும் வரலாற்றியல் வல்லுநர்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
439Shares
439Shares
lankasrimarket.com

ஜேர்மனியை அளவுக்கதிகமான அகதிகளுக்கு திறந்துவிட்டதன் பலனை Chancellor Angela Merkel அனுபவிப்பதற்கான நேரம் வந்து விட்டது, அவர் செய்த தவறால் அவரது அரசியல் வாழ்வே முடிவடையலாம் என்று Niall Ferguson என்னும் வரலாற்றியல் வல்லுநர் எச்சரித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தை மேற்கோள் காட்டி அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்ற Angela Merkel, பாலஸ்தீனிய அகதிகள் சிலருடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு சிறுமி கண்ணீர் விட்டு அழுதாள். அவளருகே சென்ற அவர் அவளை அணைத்துக்கொள்ள அழைத்தபோது அவள் மறுத்துவிட்டாள்.

இந்நிகழ்வு தர்ம சங்கடமான ஒரு சூழலை ஏற்படுத்தியது என்றாலும் இதற்குப்பின் Angela Merkel லட்சக்கணக்கான அகதிகளை நாட்டிற்குள் அனுமதிக்க முடிவெடுத்ததாக Niall Ferguson குற்றம் சாட்டுகிறார்.

ஜேர்மனியின் வரலாற்றிலேயே மிகப்பெரிய தவறான முடிவு அது என்கிறார் அவர்.

2015 முதல் ஜேர்மனியில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை பயங்கரமாக உயரத் தொடங்கியது. முதல்கட்டமாக 1.38 மில்லியன் விண்ணப்பங்கள் குவிந்தன.

கட்சியினரை திருப்திப்படுத்துவதற்காக அவர் இந்த மாபெரும் தவறை செய்துவிட்டதாக Niall Ferguson குற்றம் சாட்டுகிறார்.

அளவுக்கதிகமான அகதிகளை நாட்டிற்குள் அனுமதித்தற்கு பல முனைகளிலிருந்தும் எதிர்ப்புகள் வரத்தொடங்கியுள்ள நிலையில், அவர் செய்த தவறின் விளைவுகளை அவர் அனுபவிக்கத் தொடங்கி விட்டார் என்று கூறும் Ferguson, இதனால் ஏற்கனவே ஜேர்மனியின் அரசியலில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி விட்டதாகக் கூறுகிறார்.

இதற்கிடையில் அவரது கூட்டணிக்கட்சிகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் Merkel இன் ஆட்சி தொடருமா அல்லது அவர் பெரும்பான்மை இழப்பாரா என்பது போன்ற விடயங்களை முடிவு செய்ய இருக்கின்றன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்