ஜேர்மனியில் 100 கழிவறைகள் மாயம்: இரண்டு பேர் கைது

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் நிறுவனம் ஒன்றில் 100 கழிவறைகள் வரை காணாமல் போன சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜேர்மன் நிறுவனம் ஒன்றில் தொடர்ந்து போர்ட்டபிள் கழிவறைகள் காணாமல் போய்க்கொண்டே இருந்தன.

பொலிஸ் விசாரணையில் அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர், அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர், என இருவர் அந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவருக்கும் Duesseldorf மாகாண நீதிமன்றம் நேற்று தண்டனை வழங்கியது.

அந்த நிறுவனத்தில் பணி புரியும் 40 வயது நபருக்கு 10 மாதங்கள் சிறைத்தண்டனையும், அந்த நிறுவன முன்னாள் ஊழியருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அத்துடன் குற்றவாளிகள் தாங்கள் பணி புரியும் நிறுவனங்களிலிருந்து நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருடிய கழிவறைகளை இடைத்தரகர் ஒருவரின் உதவியுடன் நெதர்லாந்திலுள்ள நிறுவனம் ஒன்றிற்கு விற்றுவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

திருடப்பட்ட கழிவறைகளில் மூன்று மட்டுமே திரும்பக் கிடைத்துள்ளன. திருடப்பட்ட கழிவறைககளின் மதிப்பு சுமார் 70,000 யூரோக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers