ஜேர்மானிய இளைஞர்கள் எடுத்த அதிரடி முடிவு: காரணம் இது தான்

Report Print Kabilan in ஜேர்மனி
334Shares

ஜேர்மனியில் சுற்றுச்சூழல் அழிவு மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக அச்சமடைந்த ஏராளமான இளைஞர்கள், அதற்காக குரல் கொடுக்க தொடங்கியுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

ஜேர்மனியில் உள்ள 15 முதல் 26 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், சுமார் 71 சதவித இளைஞர்கள் சுற்றுச்சூழல் அழிவு மற்றும் மாசுபடுவதனால் அச்சமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் 2,572 குழந்தைகள், பதின் வயதினர் மற்றும் இளைஞர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பயங்கரவாத செயல்களுக்கு அச்சமடைந்திருந்த அவர்கள், அதனைத் தொடர்ந்து காலநிலை மாற்றத்தைக் கண்டும் அஞ்சுவதாக தெரிய வந்தது.

ஆனாலும், இளைஞர்கள் பலர் இதனை சரி செய்ய வேண்டும் என குரல் கொடுக்க தொடங்கியுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, ஜேர்மனியின் மத்திய குடும்ப மற்றும் இளைஞர் அமைச்சர் Franziska Giffe கூறுகையில்,

‘இளைஞர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்த முழக்கங்களை நோக்கிச் செல்கின்றனர். பள்ளிகளில் நமக்கு அதிகமான அரசியல் கல்வி தேவை’ என தெரிவித்துள்ளார்.

Giffe ஏற்கனவே, ஜேர்மனியின் கூட்டாட்சியில் வாக்களிக்கும் இளைஞர்களின் வயதை 18யில் இருந்து 16 ஆக மாற்ற வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை அன்று மீண்டும் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்