ஜேர்மனியில் நடுத்தெருவில் பெண்ணின் சடலம்: பொதுமக்களை அலற வைத்த சம்பவம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
473Shares

ஜேர்மனியின் ஹார்ம்பர்க் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஹார்ம்பர்க் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் திங்களன்று விடிந்ததும் பொதுமக்கள் கண்ட காட்சி, அப்பகுதி மக்களை நடுங்க வைத்தது.

நடுத்தெருவில் பெண்ணின் சடலம் ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார், அந்த சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட பெண்மணிக்கு சுமார் 50 வயது இருக்கும் எனவும், கொலை செய்யப்பட்டதாக எந்த அடையாளமும் இல்லை எனவும், நோய்வாய்ப்பட்டு இறந்திருக்க வாய்ப்பு அதிகம் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பெண்மணியை அடையாளம் கண்ட அப்பகுதி மக்கள், அவர் சமீப காலமாக நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவரது சடலத்தை இரவோடு இரவாக யார் நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டுச்சென்றனர் என்பது மர்மமாகவே இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்