கொரோனா வைரஸ் தடுப்பூசிக்காக அமெரிக்கா-ஜேர்மனி இடையே கடும் மோதல்!

Report Print Basu in ஜேர்மனி

கொரோனா வைரஸ் தடுப்பூசி உரிமைக்காக ஜேர்மனி மற்றும் அமெரிக்கா அரசாங்கங்கள் மோதலில் ஈடுபட்டு வருவதாக ஜேர்மனி ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜேர்மனியைச் சேர்ந்த க்யூர்வாக் நிறுவனம் கொரோனா வைரஸ்க்கான தடுப்பூசியை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தடுப்பூசி ஆய்வில் பணிபுரியும் ஜேர்மன் விஞ்ஞானிகளுக்கு பெரும் தொகையை வழங்குவதாக பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி முக்கிய ஜேர்மனி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்களின் பணிக்கு பிரத்யேக உரிமைகளைப் பெற டிரம்ப் விரும்புவதாகவும், தடுப்பூசியை உருவாக்க அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார், ஆனால் அது அமெரிக்காவிற்காக மட்டுமே என்று ஜேர்மனி அரசாங்க வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜேர்மனியில் இயங்குவதற்கு ஜேர்மன் அரசாங்கம் நிறுவனத்திற்கு நிதி சலுகைகளை வழங்க முயற்சித்ததாக செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

க்யூர்வேக் நிறுவனத்துடன் அரசாங்கம் தீவிரமான உரையாடலில் இருப்பதாக ஜேர்மனிய சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் டை வெல்ட்டிடம், கூறினார்.

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் உருவாக்க ஜேர்மன் அரசாங்கம் மிகவும் ஆர்வமாக உள்ளது என்று கூறினார்.

க்யூர்வாக் நிறுவனம் தென்மேற்கு ஜேர்மன் நகரமான டூபிங்கனில் அமைந்துள்ளது மற்றும் பால் எர்லிச் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது, இது ஜேர்மன் சுகாதார அமைச்சகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

க்யூர்வாக் நிறுவனம் ஜேர்மனியின் பிராங்பேர்ட் மற்றும் அமெரிக்க நகரமான பாஸ்டனில் தளங்களையும் கொண்டுள்ளது.

பல சாத்தியமான தடுப்பூசிகளைப் பற்றிய ஆராய்ச்சி தொடங்கியுள்ளதாகவும், மிகவும் நம்பிக்கைக்குரிய இரண்டு மருத்துவ பரிசோதனைகளுக்கு தேர்வு செய்யப்படுவதாகவும் க்யூர்வாக் இணை நிறுவனரும் தலைமை உற்பத்தி அதிகாரியுமான ஃப்ளோரியன் வான் டெர் மல்பே தெரிவித்தார்.

ஜூன் அல்லது ஜூலை மாதங்களுக்குள் ஒரு பரிசோதனை தடுப்பூசி உருவாக்கப்படும் என்றும், பின்னர் மக்கள் மீது சோதனை செய்வதற்கான ஒப்புதல் பெறப்படும் என்றும் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மார்ச் 2ம் தேதி, க்யூர்வாக்கின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி டேனியல் மெனிசெல்லா வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில் டிரம்ப் மற்றும் அவரது கொரோனா வைரஸ் பணிக்குழு உறுப்பினர்களுடன் கொரோனா வைரஸ் தடுப்பூசி மேம்பாடு குறித்து விவாதித்தார்.

மார்ச் 11ம் திகதி, காரணம் கூறாமல் தலைமை நிர்வாக அதிகாரி டேனியல் மெனிசெல்லாவை பதிவியிலிருந்து நீக்கப்பட்டார், அவருக்கு பதிலாக நிறுவனத்தின் நிறுவனர் இங்மார் ஹோர்ர் நியமிக்கப்படுவார் என்று நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

மேலதிக தகவல்களுக்கு

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்