ஜேர்மன் நகரங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் வசூலான அபராதத்தொகை

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியின் ஏழு பெரிய நகரங்கள் கொரோனா கட்டுப்பாட்டை மீறியதற்காக 35,000க்கும் அதிகமானவர்களிடம் அபராதம் விதித்துள்ளன.

அப்படி வசூலான தொகை, 3 மில்லியன் யூரோக்கள்! அதிகபட்சமாக முனிச் நகரத்தில்தான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, அங்கு வசூலான அபராதத்தொகை 1.2 மில்லியன் யூரோக்கள்.

ஜேர்மனியில் முனிச் நகரத்திற்கு அடுத்தபடியாக அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நகரம் ஹாம்பர்க். அங்கு வசூலிக்கப்பட்ட அபராதத்தொகை 998,000 யூரோக்கள். ஃப்ராங்பர்ட்டில் 120,000 யூரோக்களும், டஸ்ஸல்டார்ஃபில் 112,000 யூரோக்களும் வசூலானது.

பெர்லினில் 120,000 யூரோக்கள் அபராதத்தொகை வசூலானது. இத்தனைக்கும் அனைத்து விதி மீறல்களுக்கும் அபராதம் விதிக்கப்படுவதில்லை. வெறும் எச்சரிக்கையுடன் விடப்படும் தவறுகளும் உண்டு.

எல்லா விதி மீறல்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருந்தால் அபராதத்தொகை மேலும் அதிகமாகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்