முட்டைக்கோஸ் வேகவைத்த நீர்: வெறும் வயிற்றில் குடியுங்கள்

Report Print Printha in ஆரோக்கியம்

முட்டைக்கோஸ் வேவைத்த நீரில் விட்டமின் B5, B6, B1, பொட்டாசியம், மாங்கனீசு, இரும்புச்சத்து, மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது.

எனவே முட்டைக்கோஸ் வேகவைத்த நீரை வடிகட்டி தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஏராளமான மருத்துவ நன்மைகளை பெற்லாம்.

முட்டைக்கோஸ் வேகவைத்த நீரின் நன்மைகள்
  • வயிற்றுப்புண் மற்றும் இரைப்பை புண் பிரச்சனை உள்ளவர்கள் முட்டைக்கோஸ் வேகவைத்த நீரை தினமும் குடித்தால், விரைவில் குணமாகும்.
  • சரும நிறத்தை அதிகரிப்பதோடு தேகத்தில் மினுமினுப்பு கூடும். மேலும் கரும்புள்ளி, முகப்பருக்கள் ஆகியவை மறையும்.
  • கூந்தலுக்கு தேவையான புரதம் மற்றும் கோலாஜன் முட்டைக்கோஸ் வேகவைத்த நீரில் இருப்பதால் அது கூந்தலின் அடர்த்தியை அதிகரிக்கிறது.
  • பற்கள் சொத்தை, ஈறுகள் வலி, பல்வலி, வீக்கம் ஆகிய பிரச்சனை உள்ளவர்கள் முட்டைக்கோஸ் வேகவைத்த நீரை வாயில் 30 நிமிடம் வைத்து குடிக்க வேண்டும்.
  • முட்டைக்கோஸ் வேகவைத்த நீரில் இருக்கும் சல்ஃபர் மற்றும் ல்யூடின், போன்ற மூலக்கூறுகள் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
  • நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்யவும், உடல் பருமனை குறைக்கவும் உதவுகிறது.
  • முட்டைக்கோஸ் வேகவைத்த நீரில் உள்ள அதிகப்படியான விட்டமின் C உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • முட்டைக்கோஸில் உள்ள விட்டமின் K, எலும்பு வளர்ச்சியை மேம்படுத்தி, எலும்பு தேய்மனம், மூட்டு வலி போன்ற பிரச்சனை வராமல் தடுக்கிறது.
  • அடிக்கடி இந்த நீரை குடித்து வந்தால் கண்பார்வைக் கோளாறுகள், மலச்சிக்கல், குடலில் உருவாகும் தொற்றுகள், மூலநோய், அஜீரணம் ஆகிய பிரச்சனைகள் குணமாகும்.
குறிப்பு

முட்டைகோஸை தனித்தனி இலையாக பிரித்து கழுவ வேண்டும். ஏனெனில் அது விளையும் போது உருவாகும் ஒவ்வொரு இலையிலும் மருந்து தெளிப்பார்கள். அதனால் மஞ்சள் போட்ட சுடுநீரில் சில நிமிடங்கள் முட்டைக்கோஸை வைத்த பின் பயன்படுத்துவதே நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...