ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மிக மோசம்: லண்டன் மருத்துவர்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மிக மோசமாக உள்ளது என லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், சர்வதேச தரத்தில் சிகிச்சை அளித்தும், அதில் முன்னேற்றம் இல்லை.

அதிகபட்சம் அவரது உடலில் என்ன செய்ய முடியுமோ, அதை செய்தாகிவிட்டது என தெரிவித்துள்ளார்.

முதல்வர் உடல்நிலையை தாம் தொடர்ந்து கவனித்து வந்ததாகவும், ஆனால் துரதிஷ்டவசமாக மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், முதல்வரை காப்பாற்றுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் மருத்துவர்கள் தற்போது செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இறுதியாக, இந்தக் கடினமான சூழ்நிலையில் தமிழக மக்களுக்கு என் பிரார்த்தனைகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments