ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய தரகர் : உதவிய வாட்ஸ் அப் வீடியோ

Report Print Santhan in இந்தியா

சவுதியில் சித்ரவதை அனுபவித்த பெண், வாட்ஸ் அப் உதவியின் மூலம் பொலிசார் அவரை பத்திரமாக மீட்டுள்ளனர்.

ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி(40). கணவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், தனது மூன்று குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக துபாய் செல்ல முடிவு செய்துள்ளார்.

அதைத் தொடர்ந்து துபாய் செல்வதற்கு தரகர் ஒருவரிடம் சுப்புலட்சுமி 80,000 ரூபாய் பணம் கொடுத்துள்ளார். அந்த தரகரும் அங்கு சென்றால் நிறைய சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி, ரியாத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

ரியாத்திற்கு சென்ற பின்னர் தான் சுப்புலட்சுமிக்கு தெரியவந்துள்ளது, தரகர் தன்னை விற்றுவிட்டான் என்று, ரியாத்தில் இருந்த சுப்புலட்சுமியை, அங்கிருந்தவர்கள் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

விரக்தியில் இருந்த அவருக்கு தன் மகள் வாட்ஸ் அப் பற்றி கூறியது, நினைவுக்கு வந்துள்ளது. அதன் பின் அங்கிருந்த செல் போனை எடுத்து, வாட்ஸ் அப்பில் தன்னுடைய நிலைமை குறித்து, தன்னுடைய உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார்.

இதைக் கண்ட அவரது உறவினர்கள் உடனடியாக அங்கிருந்த மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளனர். அவர்கள் எடுத்த நடவடிக்கையின் பேரில், தரகர் சுப்புலட்சுமி இருக்கும் இடத்தை கூறியுள்ளார்.

சுப்பு லட்சுமி இருக்கும் இடத்தை அறிந்த அவர்கள் உடனடியாக ரியாத்திற்கு சென்று அவரை மீட்டுள்ளனர். இது குறித்து சுப்பு லட்சுமி கூறுகையில், நிச்சயமாக நான் தன்னுடைய கணவன் மற்றும் குழந்தைகளை காண்பேன் என்ற நம்பிக்கை இழந்து இருந்தேன்.

வாட்ஸ் அப் பயன்படுத்தியதால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளேன். ஆசை காட்டி ஏமாற்றும் இத்தகைய தரகர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments