வட்டி மேல் வட்டி: பிரபலங்களை ஆட்டிவைத்த கந்துவட்டிகாரர் கைது

Report Print Deepthi Deepthi in இந்தியா

வட்டி மேல் வட்டி போட்டு சினிமா பிரபலங்களை ஆட்டிவைத்த கந்துவட்டிகாரர் முகுந்த் தனது இரு மகன்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா தனது இரு மகன்களுடன் கந்துவட்டி தொழில் செய்துவந்துள்ளார்.

தயாரிப்பாளர்கள், நடிகர் நடிகையரை அணுகி படம் எடுக்க பல லட்சம் ரூபாய்களை கடனாக கொடுப்பார்.

அந்த படங்கள் ரீலிசாகும்போதும் திடீரென நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெறுவார், பின்னர் அவர்களிடம் இருந்து கந்துவட்டியாக பலகோடி ரூபாய் வசூலிப்பார்.

இயக்குநர் கஸ்தூரி ராஜா உட்பட பல்வேறு சினிமா பிரபலங்கள் இவரிடம் சிக்கியுள்ளனர், மேலும் அளவுக்கதிகமாக வட்டி வாங்குகிறார் என வழக்கும் தொடர்ந்தனர்.

இந்நிலையில், பிரபல தொழிலதிபர் கணபதி என்பவர் தனது ஓட்டல் தொழிலை விரிவுபடுத்துவதற்காக முகுந்திடம் 83.50 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். 2016 ஆம் ஆண்டில் வாங்கிய இந்த கடனில் பல லட்சம் ரூபாய் வட்டி செலுத்தியுள்ளார்.

ஆனால், பத்து நாளைக்கு ஒருமுறை கூட்டு வட்டியாக சேர்த்து 4.24 கோடி வட்டியாக தரவேண்டும் என கணபதியை, முகுந்த் மிரட்டியுள்ளார். மேலும் கணபதியின் ஓட்டலையும் விற்பனை பத்திர ஒப்பந்தம் போட்டு மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து பொலிசில் புகார் அளித்ததையடுத்து முகுந்த் உட்பட அவரது இரு மகன்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்