கழுத்து அறுத்துக் கொல்லப்பட்ட 7 வயது மாணவன்: அதிர்ச்சி சம்பவம்

Report Print Fathima Fathima in இந்தியா
493Shares
493Shares
lankasrimarket.com

இந்தியாவில் பள்ளிக் கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்துடன் 7 வயது மாணவன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டில்லியை அடுத்த குர்கானில் ரியான் சர்வதேச பள்ளி செயல்பட்டு வருகிறது, இங்கு ப்ரதுமன் தாகூர்(வயது 7) என்ற மாணவன் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் பள்ளிக் கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ப்ரதுமன் ரத்த வெள்ளத்துடன் கிடந்தார்.

இதை பார்த்த சக மாணவர்கள் ஆசிரியருக்கு தகவல் அளித்துள்ளனர், உடனடியாக பொலிசுக்கு தெரிவிக்கப்பட விரைந்து வந்த அதிகாரிகள் ப்ரதுமனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே ப்ரதுமன் உயிரிழந்ததாக தெரிகிறது, இதனையடுத்து தடயவியல் நிபுணர்கள் மாணவன் இறந்து கிடந்த இடத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

மாணவனின் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களிடமும் பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பள்ளியின் அலட்சியப் போக்கே தன்னுடைய மகனின் மரணத்திற்கு காரணம் என ப்ரதுமனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்