காதல் வளர்த்த கல்லூரியிலே சில ஆண்டுகள் கழித்து இணைந்த காதலர்கள்: சுவாரசிய காதல் கதை

Report Print Raju Raju in இந்தியா

கல்லூரி படிப்பை முடித்து சில ஆண்டுகள் ஆன பின்னரும், தங்கள் காதலுக்கு அடையாளம் கொடுத்த அதே இடத்துக்கு சென்று காதலர்கள் திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் எர்ணாகுளம் நகரில் மகாராஜா கல்லூரி அமைந்துள்ளது. இங்கு அமர்நாத் (24) மற்றும் சப்னா (23) ஆகியோர் கடந்த 2011-லிருந்து 2015-ஆம் ஆண்டு வரை படித்தனர்.

இருவரும் ஒரே கல்லூரி என்றாலும் வேறு வேறு பாடப்பிரிவில் படித்துள்ளனர்.

அப்போது இஸ்லாமிய பெண்ணான சப்னாவுக்கும், ஹிந்துவான அமர்நாத்துக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

கல்லூரி படிப்பு முடிந்து சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தங்கள் காதலை வளர்த்த கல்லூரி வளாகத்திலேயே காதலர்கள் கடந்த 2-ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர்.

சப்னா கழுத்தில் அமர்நாத் தங்க செயின் அணிவித்தார். இதில் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கலந்து கொண்டனர்.

இதற்கு முன்பு காதலர்கள் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொண்டார்கள்.

அமர்நாத் கூறுகையில், என் நண்பர் விளையாட்டாக கல்லூரியில் திருமணம் செய்ய சொன்னார், எங்கள் காதலை எங்களுக்கு உணர்த்திய இடமான கல்லூரியில் ஏன் திருமணம் செய்யக்கூடாது என நான் யோசித்து அதையே செயல்படுத்தினோம்.

மகாராஜா கல்லூரி பல காதல் நினைவுகளை எங்களுக்கு கொடுத்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் திகதி நாடக போட்டியில் எங்கள் கல்லூரி தான் ஜெயித்தது .

நண்பர்களுடன் நானும், சாப்னாவும் கல்லூரியில் தான் அன்று தங்கினோம். அங்குள்ள குளம் அருகில் அதிகாலை 2 மணி வரை இருவரும் உட்கார்ந்து பேசியது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என கூறியுள்ளார்.

இவர்கள் திருமண செய்திக்கு நல்ல வரவேற்பு உள்ள போதிலும், இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் சமூகவலைதளங்களில் சில விமர்சனங்களும் எழுந்துள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்