ராகுல் மிகவும் அழகு: நேரில் பார்க்க விரும்பும் 107 வயது பாட்டி

Report Print Santhan in இந்தியா

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்து மிகவும் அழுகு என்றும் எப்படியாவது அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் 107 வயது பாட்டி உள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்தவர் தீபாலி சிகாந்த், இவர் சமீபத்தில் என்னுடைய பாட்டிக்கு 107-வது பிறந்த தினம் என்றும் அவருடைய ஒரே விருப்பம் ராகுல்காந்தியை நேரில் பார்க்க வேண்டியது என்பது தான், இது குறித்து நான் என் பாட்டியிடம் ஏன் ராகுல் காந்தியை பார்க்க இவ்வளவு ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்ட போது, அவர் மிகவும் அழகாக இருப்பார் என்று பாட்டி கூறியதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதைக் கண்ட ராகுல், தனது டுவிட்டர் பக்கத்தில், டியர் தீபாலி உங்களின் அழகான பாட்டிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்து மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவியுங்கள். எனது பெரிய அரவணைப்பையும் அவருக்கு வழங்குங்கள் என பதிவிட்டிருந்தார்.

மேலும் இன்ப அதிர்ச்சியாக தொலைப் பேசி மூலம் அவர்களை தொடர்பு கொண்டு அந்த பாட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் ராகுல் தெரிவித்துள்ளார்.

இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் பாட்டியின் சார்பாக, அவருக்கு நன்றி தெரிவித்து டுவிட் செய்திருந்தார் தீபாலி.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்