இணையத்தில் மகளின் பாலியல் வன்கொடுமை வீடியோ: கண்ணீர் விட்டு கூறிய சிறுமி

Report Print Santhan in இந்தியா

தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வீடியோவை இணையத்தில் பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

டெல்லியின் மங்கோல்பூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை வீட்டிற்கு அருகில் வசிக்கும் 32 வயது மதிக்கத்தக்க ஒருவர், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அப்போது அவரின் நண்பர்கள் அங்கு இருந்ததால், இதுகுறித்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு வெளியில் கூறினால் இணையத்தில் பதிவேற்றம் செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதனால் அச்சத்தில் இருந்த சிறுமி இதுகுறித்து பெற்றோர்களிடம் கூறாமலே இருந்துள்ளார்.

இந்நிலையில் அந்த சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான ஒருவர் ஏதேச்சையாக இணையத்தை பார்க்கும் போது அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருந்த வீடியோ இருந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் கூறியுள்ளார், பெற்றோரும் அதனை பார்த்து உறுதிசெய்த பின்பு மகளிடம் இது குறித்து கேட்டுள்ளனர்.

சிறுமி நடந்தவைகள் அனைத்தையும் கண்ணீர் மல்க கூறியுள்ளார். அதன் பின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்