பெருமாள் கோவிலில் ஐம்பொன்சிலைகள் கொள்ளை: சிசிடிவி காட்சிகள் வெளியானது!

Report Print Raju Raju in இந்தியா

நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள பெருமாள் கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவில் தாழ்ப்பாளை உடைத்து ஐம்பொன் சிலை உள்பட 5 சிலைகள் மற்றும் உண்டியலை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.

இதில் பெருமாள் சிலை, பூமா தேவி சிலை, லட்சுமி சிலை ஆகிய ஐம்பொன் சிலைகள் மற்றும் 2 வெண்கலச் சிலைகள் அடக்கமாகும்.

இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. கோவிலின் சிசிடிவியில் பதிவான காட்சிகளை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

அதில், கொள்ளையன் கையில் கடப்பாறையுடன் வந்து பூட்டை உடைக்க முயற்சி செய்திருப்பது பதிவாகியுள்ளது.

அந்த நபரை பொலிசார் அடையாளம் காண முயன்று வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers