போர்க்களமானது தூத்துக்குடி

Report Print Deepthi Deepthi in இந்தியா

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்தினர்.

இந்த போராட்டத்தின் போது தடியடி, கல்வீச்சு, கண்ணீர்புகை, பொலிசாரின் துப்பாக்கிச்சூடு ஆகியவற்றால் போர்க்களமானது தூத்துக்குடி.

போராடிய மக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் காரணமாக தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், நகர் முழுவதும் ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த சம்பவம் பற்றி ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் மூலம் நீதி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

மேலும் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்து இருக்கிறது.

இது குறித்து காவல் துறையினர் விளக்க அறிக்கையில், தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைந்தும், அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தும் எரித்தனர்.

கண்ணாடிகளை சேதப்படுத்தியதால் போராட்டக்காரர்கள் சட்டவிரோத கும்பல் என அறிவிக்கப்பட்டு, அக்கும்பல் பொதுமக்கள் உயிருகும் பொதுச்சொத்துக்களுக்கும் ஆபத்து விளவிப்பதை தடுக்கும் பொருட்டு அவர்களுக்கு தகுந்த எச்சரிக்கை விடப்பட்டது.

அதன்பின்னரே, கண்ணீர் புகைக்குண்டுகளை உபயோகித்தும், தடியடி நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால் , காவல்துறையினர் மீது எதிர்த்தாக்குதல் நடத்தியதால் வேறுவழியின்றி துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.

இதனையடுத்து அக்கும்பல் அப்பகுதியில் இருந்து கலைந்தது. இந்த சம்பவங்களின் போது சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers