சைக்கிளில் சென்ற பிரபல நடிகைக்கு நேர்ந்த கதி: கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் அதிகாலையில் சைக்கிள் ஓட்டிச் சென்ற பிரபல நடிகை சஞ்சானாவிடம் விலையுயர்ந்த செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கோ, ரேணிகுண்டா, அஞ்சான் போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருபவர் சஞ்சனா சிங். இவர் சென்னை முகப்பேறு நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

தினமும் அந்த பகுதியில் நடைப்பயிற்சி, சைக்கிள் பயிற்சி மேற்கொள்ளும் சஞ்சனா இன்று கீழ்பாக்கத்தில் உள்ள தன்னுடைய சகோதரி வீட்டிற்கு செல்வதற்காக செல்போனில் உள்ள மேப்பை பார்த்துக் கொண்டு சைக்கிளில் சென்றுள்ளார்.

அப்போது சிந்தாமணி சிக்னல் அருகே சஞ்சனாவின் கையில் இருந்த 80,000 மதிப்பிலான விலையுயர்ந்த செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றனர்.

ஹெல்மட் அணிந்து கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து சஞ்சனா கூறுகையில், செல்போனை பறித்துச் சென்றவர்களை பிடிக்கலாம் என்று சைக்கிளில் செல்வதற்குள் அந்த நபர்கள் பைக்கில் ஓடிவிட்டதாக கூறினார்.

மேலும் இது குறித்து நடிகை சஞ்சனா புகார் அளித்துள்ளதால், பொலிசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்