மாமனாரை திருமணம் செய்து கொண்ட மருமகள்: கணவரே முன்னின்று நடத்திய கொடுமை

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் நிக்கா ஹலாலா முறையில் இஸ்லாமிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் பரீலி நகரை சேர்ந்தவர் வாசிம். இவர் மனைவி ஷபினா.

இருவருக்கும் கடந்த 2009-ல் திருமணமான நிலையில் இரண்டாண்டுகள் கழித்து முத்தலாக் கூறி ஷபினாவை வாசிம் பிரிந்துள்ளார்.

ஆனால் மீண்டும் ஷபினாவை மணக்க அவர் விரும்பியுள்ளார்.

இஸ்லாமிய வழக்கப்படி முத்தலாக் பெற்ற பெண் வேறு நபரை திருமணம் செய்து அவரை பிரிந்த பின்னரே முதலில் மணந்த நபரை மீண்டும் மணக்க முடியும்.

இதற்கு நிக்கா ஹலாலா என பெயராகும். அதன்படி தனது தந்தையை ஷபினா திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்திய வாசிம் அதை செய்து காட்டியுள்ளார்.

பின்னர் வாசிம் தந்தையை பிரிந்த ஷபினா மீண்டும் வாசிமை மணந்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் மனைவியை கடந்தாண்டு பிரிந்த வாசிம் சமீபத்தில் அவருடன் சேர விரும்பியுள்ளார்.

இதையத்து தனது தம்பியை திருமணம் செய்ய ஷபினாவை வற்புறுத்த அவர் சம்மதிக்கவில்லை.

மேலும் இது குறித்து உதவி செய்யும் சமூகத்தின் தலைவர் நிதா கானிடம் கூற அவர் மூலமாகவே இந்த சம்பவம் ஊடக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தற்போது பொலிசார் இச்சம்பவத்தில் தொடர்புடைய வாசிம் உட்பட ஐவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வல்லுனர்கள் கூற்றுபடி, ஹலலா என்பது விவாகரத்தை தவிர்ப்பதற்கான நடவடிக்கை என கூற்ப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்