கேரள பெருவெள்ளம்: ஆப்பிள் நிறுவனம் அளித்த இன்ப அதிர்ச்சி

Report Print Arbin Arbin in இந்தியா

பெருவெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளான கேரள மக்களுக்கு ஆதரவாக அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் 7 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

நிதியுதவி மட்டுமின்றி சொந்த குடியிருப்புக்கு செல்ல முடியாமல் நிவாரண முகாம்களில் தவித்துவரும் அப்பாவி மக்களை மீள்குடியமர்த்துவதில் ஆதரவையும் அறிவித்துள்ளது.

கேரளாவில் கன மழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு 370 பேருக்கும் மேலானோர் பலியாகினர்.

மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து உதவிக்கரம் நீண்டு வருகிறது.

நிதியுதவியும் பொருளதவியும் கேரள பெருவெள்ளத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு அளித்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்காக சுமார் 7 கோடி ரூபாய் அளித்துள்ளது.

மட்டுமின்றி குடியிருப்பு இழந்த மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், பாடசாலைகள் மற்றும் இந்த பெருவெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை ஆதரிக்கவும் ஆப்பிள் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

மேலும், ஆப்பிள் வாடிக்கையாளர்களிடம் இருந்து திரட்டப்பட்டும் நிதியையும் குறிப்பிட்ட காலத்துக்குள் கேரளாவுக்கு அளிக்கப்படும் என அந்த நிறுவன அதிகாரிகள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்