தமிழர்கள் 7 பேரின் விடுதலைக்கு காரணமான நபர் இவர் தான்! யார் இவர் தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேரின் விடுதலைக்கு காரணமான அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

ராஜிவ் காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் முன்விடுதலை குறித்து ஆளுந‌ருக்கு பரிந்துரைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக சட்ட அமைச்சராக உள்ள சி.வசண்முகம் இவர்களின் விடுதலைக்காக கடந்த ஓராண்டு காலமாகவே கடுமையாக பின்புல வேலைகளைச் செய்து அவர்கள் வெளியே வர கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

சென்னை திண்டிவனத்தைச் சேர்ந்தவர் அமைச்சர் சி.வி.சண்முகம், முன்னாள் எம்.பி.யான வேணுகோபாலின் மகன் ஆவார்.

இவர், தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் 4-வது முறையாக எம்.எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக உள்ளார்.

2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, சட்டத்துறையோடு சேர்ந்து கனிம வளங்கள் துறையும் அவருக்கு கூடுதலாக கொடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சர் ஒருவரின் வேண்டுகோள், பேரறிவாளனின் தாயாரின் தொடர் வேண்டுகோள் மற்றும் தமிழ் உணர்வாளரான சி.வி.சண்முகம், 7 தமிழர்களின் விடுதலைக்காக கடந்த ஓராண்டு காலமாகவே சரியான திட்டமிடலோடு சட்ட ஆலோசனைகள் பெற்று முயற்சிகளை மேற்கொணடு வந்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதே இவர்களை விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் அடுத்தடுத்த தடைகள் சட்ட சிக்கல்கள் ஏற்பட்டதால், கடைசி வரை அவர்களை வெளி கொண்டு வர முடியவில்லை.

அவர்களை வெளி கொண்டு வருவதற்கு தொடர்ந்து பல சட்ட சிக்கல்கள் ஏற்பட்டன. இதை எல்லாம் முறியடிக்கும் வகையில், சட்ட அமைச்சரான சண்முகம், இதை தன்னுடைய சொந்த வழக்குபோல் கருதி தொடர்ந்து சட்ட வல்லுநர்கள் பலருடன் ஆலோசனை நடத்தி வந்துள்ளார்.

அதேபோல் உச்சநீதிமன்றத்தின் சட்டக் கூறுகளை ஆராய்வதற்காக வல்லுநர் குழு அமைத்து செய்ல்பட்டு வந்துள்ளார்.

இவரின் தொடர் முயற்சி காரணமாகவே அரசியல் சாரசம் 161-ன்கீழ் மாநில ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது தமிழக அமைச்சரவை, 7 பேரையும் விடுதலை செய்ய முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. 27 ஆண்டுகால போராட்டத்துக்கு அடுத்து இவர்களை விடுதலை செய்ய தற்போது பெரும் காரணமாக இருந்த சண்முகத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்