நடிகர் விஜய்யை பற்றி அமைச்சரிடம் பேசிய முதல்வர்.. என்ன செய்ய போகிறார்? வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in இந்தியா

பிரபல திரைப்பட நடிகரான விஜய் நன்றியோடு இல்லை, என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் ஒருவரிடம் விவாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் தீபாவளியன்று ரிலீசானது. இப்படம் ஆரம்பத்தில் இருந்தே ஒரு அரசியல் படம் என்று பெரிதும் பேசப்பட்டது.

அதே போன்று படமும் ரிலிசான இரண்டு, மூன்று தினங்கள் நன்றாக சென்றது. அதன் பின் திடீரென்று இப்படத்தில் ஜெயலலிதாவை இழிவுபடுத்துவது போன்று காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், அரசு இலவசமாக கொடுக்கும் திட்டங்களை தூக்கி எறிவது போன்று காட்சிகள் இருப்பதாக கூறி, அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

குறிப்பாக சர்கார் திரைப்படம் ஓடும் திரையரங்குகள் முன்பு நின்று போராட்டம் நடத்தியதோடு மட்டுமின்றி, அங்கிருந்த பேனர்களை கிழித்தெறிந்தனர். இதனால் விஜய் ரசிகர்கள் ஆத்திரத்தில் உள்ளனர். அவர்கள் அனைவரும் விஜய் ஒருவார்த்தை சொல்லட்டும் பிறகு இவர்களுக்கு இருக்கு என்று காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தன்னுடைய பட பேனர்கள் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் இன்னமும் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் விஜய் அமைதியாக உள்ளார். அதுமட்டுமின்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதற்கும் அவர் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் சர்கார் படவிவகாரத்தை எடப்பாடி பழனிச்சாமி அவ்வளவு எளிதாக விடப்போவதில்லையாம். இது குறித்து அவர் அமைச்சர் ஒருவரிடம் கூறுகையில், இலவச நலத்திட்டங்களுக்கு எதிராக பட வசனங்களை வைத்துள்ளனர்.

மக்கள் நலனுக்காக வழங்கப்படும் இலவசங்களுக்கு ஆதரவாக நாம் இருக்கிறோம். அம்மாவின் விசுவாசிகளாவும் களத்தில் இருக்கிறோம். அதனால்தான் சர்கார் படத்துக்கு எதிராக கழகத் தொண்டர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மெர்சல் பட விவகாரத்தில் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த போதும், அவர்கள் எதிர்ப்பையும் மீறி நாம் விஜய்க்கு நல்லது செய்து கொடுத்தோம். ஆனால் விஜய் அந்த நன்றியோடு இல்லையே, சர்கார் விவகாரத்தில் விஜய் பாதிக்கப்பட்டாலோ படம் ஓடினாலோ ஓடாவிட்டாலோ அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

நம்முடைய வேலையைச் சரியாகச் செய்தால் போதும் என்று கூறியுள்ளார். அதாவது சர்கார் விவகாரத்தில் தன்னுடைய தலைமை பேசப்பட வேண்டும் என்று முதல்வர் கணக்குபோடுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers