வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்: மது போதையில் இருந்தது அம்பலம்

Report Print Raju Raju in இந்தியா

கொலம்பியாவை சேர்ந்த இளம் பெண் இந்தியாவில், மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியாவை சேர்ந்தவர் கரீன் டேனியிலா (25). இவர் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார்.

அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மொழி பெயர்பாளராக டேனியிலா பணிபுரிந்தார்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் முன்னோட்ட கொண்டாட்டத்தில் இரு தினங்களுக்கு முன்னர் டேனியிலா கலந்து கொண்டார்.

கொண்டாட்டத்தில் கொலம்பியாவில் இருந்து வந்து பெங்களூரில் தங்கியிருந்த பலர் கலந்து கொண்டனர்.

அங்கு அதிகளவு மது அருந்திய டேனியிலா தனது தோழி மரியாவுடன் அதிகாலை 2 மணியளவில் தனது வீட்டுக்கு வந்தார். பின்னர் இருவரும் படுத்து தூங்கியுள்ளனர்.

இந்நிலையில் அதிகாலை 3 மணிக்கு வீட்டின் பால்கனியில் இருந்து டேனியிலா கீழே விழுந்துள்ளார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு கண்விழித்த மரியா அங்கு சென்று பார்த்த போது டேனியிலா கீழே ரத்த வெள்ளத்தில் விழுந்து இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு பொலிசார் டேனியிலா சடலத்தை கைப்பற்றினார்கள்.

பொலிசார் கூறுகையில், குடிபோதையில் இருந்த டேனியிலா தவறுதலாக மேலிருந்து கீழே விழுந்து இறந்திருக்கலாம்.

அவரின் இறப்பு குறித்து கொலம்பியா தூதரகத்துக்கு தகவல் கொடுத்துள்ளோம்.

இயற்கைக்கு மாறான இறப்பு வழக்காக இதை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்