விண்ணில் பறக்க தயாராக இருக்கும் தமிழனின் செயற்கைகோள்

Report Print Vijay Amburore in இந்தியா

தமிழக மாணவன் ரிபாத் ஷாருக் உருவாக்கிய, உலகிலேயே குறைந்த எடை கொண்ட செயற்கைகோள், பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிறுவனம், திட மற்றும் திரவ நிலைகளுடன் 4 நிலைகளை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி–44 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஜனவரி 24 ம் தேதி இரவு 11.40 மணிக்கு ஏவ உள்ளது.

இதனுடன் ’ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு மற்றும் ரிபாத் ஷரூக், ஸ்ரீமதி கேசன் உள்ளிட்ட மாணவர்கள் இணைந்து சிறிய அளவில் தயாரித்துள்ள ‘கலாம் சாட்’ மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்த ‘மைக்ரோசாட்–ஆர்’ ஆகிய 2 செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

மாணவர்கள் தயாரித்த ‘கலாம் சாட்’ செயற்கைகோள் ஹாம் ரேடியோ சேவைக்காகவும், இஸ்ரோ தயாரித்த ‘மைக்ரோசாட்–ஆர் இமேஜிங்‘ செயற்கைகோள் பூமி கண்காணிப்புக்காகவும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்