பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய சீமானின் வீடியோ: குடியுரிமையை ரத்து செய்ய கூறிய காயத்ரி ரகுராம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

இந்திய இராணுவ வீராகள் மீதான தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்திய மக்கள் வெறுப்புணர்வு கொண்டுள்ள நிலையில்,சீமான் முன்பு ஒருமுறை பாகிஸ்தான் குறித்து பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முன்பு ஒருமுறை பேட்டி அளித்திருந்தார். அதில், 'பாகிஸ்தான் ஒரு அப்பாவி நாடு. பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது கோழைதனம் என்று கூறியிருந்தார்.

தற்போது அந்த வீடியோவை இந்துத்துவ அமைப்பினர் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

இந்த வீடியோவை பார்த்த நடிகை காயத்ரி ரகுராம், சீமான் மக்களுக்கு என்ன செய்தார்? தமிழ் மக்களை காப்பாற்றினாரா? எந்தவொரு நன்மையையும் செய்தாரா? ஏதாவது ஒன்றை சொல்ல முடியுமா? இந்தியாவை விட்டு சீமான் வெளியேறி பாகிஸ்தானில் குடியேற வேண்டும். சீமானின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

இதனைப்பார்த்த சிலர் காயத்ரி ரகுராமுக்கு ஆதரவாகவும், ஒரு சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர். முன்பு பேசிய வீடியோ குறித்து இப்போது கருத்து பதிவிடுவதா என விமர்சனம் செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers